ணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்பிணிஅன்றோ பீடு நடை.   

நாணம் உடைமை சான்றோர்களுக்கு ஓர் ஆபரணம் ஆகும் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்.

Advertisment

ஆனால் அது சான்றோர்களுக்குத்தானே என்பதுபோல் ஒருவரை ஒருவர் இழித்தும் பழித்தும் பேசிவிட்டு, தேர்தல் நெருக்கத்தில் பேசியதை யெல்லாம் மறந்து நாணமின்றி கூட்டணி அமைத்திருக்கின்றனர்.

Advertisment

அடித்துப்பிடித்து, மிரட்டி, நெருக்கி, டெல்-க்கும் தமிழகத்துக்குமாக இழுத்தடித்து ஒருவழியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் முடிவாகியிருக்கிறது.

ஜெ. மறைவுக்குப் பின், சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். பதவியிறக்கப்பட்டு, அந்த இடத்துக்கு சசிகலாவின் நம்பிக்கைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வரப்பட்டார். ஆனால், எடப்பாடியோ ஆட்சியில் தன் நிலையை ஸ்திரப்படுத்திக்கொண்டு டி.டி.வி. தினகரனையும் சசிகலா ஆதரவாளர்களையும் மெல்ல மெல்ல அப்புறப்படுத்தினார். இதனால், தினகரன் எடப்பாடிக்கு எதிரானவராக மாறினார்.

Advertisment

உதாரணத்துக்கு, தினகரன் வகிக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி சட்டவிரோதமானது என அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 2017-ஆம் ஆண்டு என தீர்மானம் நிறைவேற்றினார் எடப்பாடி.

2017 ஆம் ஆண்டு தினகரன், எடப்பாடியை துரோகி என்றபோது,. "யார் துரோகி என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்'' என குற்றச்சாட்டை தினகரன் பக்கம் திருப்பினார் எடப்பாடி.

எடப்பாடி ஆட்சியேற்று டி.டி.வி. தினகரனையும் அவரது ஆதரவாளர்களையும் ஒதுக்கியது முதற்கொண்டே தினகரன் எடப்பாடி பழனிச்சாமியை துரோகி, பச்சைத்துரோகி, முதுகில் குத்தியவர் என வெவ்வேறு வார்த்தைகளில் கடும் விமர்சனங்களை மேற்கொண்டுவருகிறார்.

"பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தேர்தல் ஆணையத்தில் ஒரு கருத்தையும், ஆணையத்துக்கு வெளியே ஒரு கருத்தையும் கொண்டு, முரண்பாடான தகவலையும் வெளியிடுபவர் எடப்பாடி பழனிசாமி. "420'' வேலையில் ஈடுபடுவோருக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லமுடியாது" என்று எடப்பாடியை குத்திக்காட்டினார் தினகரன். இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, "420 என்ற வார்த்தையே தினகரனுக்குத்தான் பொருந்தும்'' என்றார்.

இப்படி இத்தனை வருடங்களாகத் தொடர்ந்த உரச-ல், சமீபகாலங்களாக தினகரன் கூர்மையான வார்த்தைகளால் எடப்பாடியைக் கிழித்தார். "துரோகம் செய்ததற்காக நோபல் பரிசு பெறத் தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி. 2017 பிப்ரவரியி-ருந்து அவர் செய்த துரோகங்களுக்கு கடவுள் தண்டனை வழங்கிக்கொண்டிருக்கிறார். 2026-ல் அவருக்கு தீர்ப்பு எழுதப்படும்'' என 2016 தேர்த-ல் எடப்பாடிக்கு முடிவுரை எழுதப்படும் என்றார்.

"என்றுமே எடப்பாடி பழனி சாமிக்கு நான் சிம்ம சொப்பனம் தான். துரோகத்தை வீழ்த்தாமல் நான் ஓயமாட்டேன். யார் தடுத்தாலும் ஓயமாட்டேன். எதற்காகவும் சமரசம் கிடையாது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் கூட்டணிக்குப் போகமாட்டேன்' என்றெல்லாம் கடுமையாக பேசிவந்தார். "எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொள்வதற்கு பதில், தற்கொலை செய்துகொள்ளலாம்' என்றுகூட துணிந்தார்.

அ.தி.மு.க.வி-ருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி நீக்கியபோது, "செங்கோட்டையனை நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர். கெடுவான் கேடு நினைப்பான்' என சாபமிடுவதுபோல் பேசினார் தினகரன்.

அதேபோல எடப்பாடியும் 2024-ல் தினகரனை, "தி.மு.க.வின் பி டீம்' என விமர்சித்தார். பதிலுக்கு தினகரன். "அ.தி.மு.க.வே தி.மு.க.வின் பி டீம்' என பழித்தார்.

சமீபத்தில் அமித்ஷாவின் அழைப்பின் காரணமாக எடப்பாடி டெல்-க்குச் சென்றபோது கைக்குட்டையால் முகம் மறைத்துச் சென்றதற்காக, முகமூடி அணிந்துபோனதாக எடப்பாடியை தினகரன் விமர்சித்ததற்கு, "நான் முகமூடி அணிந்துபோகவில்லை. தினகரன்தான் அ.தி.மு.க.வுக்குள் முகமூடி அணிந்து நுழைந்தார்'' என விமர்சித்தார் எடப்பாடி.

இந்நிலையில், மதுராந்தகத்தில் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், "எங்களுக்குள் இருப்பது பங்காளிச் சண்டை மட்டுமே. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பழைய கருத்து வேறுபாடுகளைத் மறந்துவிட்டு கூட்டணியில் இணைந்துள்ளேன்' என்று வெட்கத்தைவிட்டுச் சொல்ல, பதிலுக்கு, தினகரனை சகோதரன் எனக் குறிப்பிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

2021 தேர்தல் முடிவுக்குப் பின் அ.தி.மு.க.வை விமர்சித்த பா.ம.க. "தங்கள் கட்சி இல்லையென்றால் 40 தொகுதிகளில்கூட ஜெயித்திருக் காது' என விமர்சனம் செய்ய, பதிலுக்கு அ.தி.மு.க.வின் புகழேந்தி, "அ.தி.மு.க. கையெழுத்துப் போடாவிட்டால் அன்புமணி எம்.பி. ஆகியிருக்க முடியாது' என்று காலை வாரினார். 

2022 பா.ம.க. பொதுக்குழுவில் பேசிய அன்புமணி ராமதாஸ், "பா.ம.க. ஆட்சியில் இல்லாமலே பல விஷயங்களை சாதித்தது. அ.தி.மு.க.வோ இப்போது 4 ஆக உடைந்து கிடக்கிறது' என விமர்சித்தார்.

ஆனால் அதே அ.தி.மு.க. இடம்பெற்றுள்ள தே.ஜ.கூட்டணியில் எடப்பாடி ஒதுக்கும் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டுதான் வரும் 2026 தேர்த-ல் போட்டியிடப்போகிறார் அன்புமணி. தவிரவும், இன்றைக்கு பா.ம.க.வே இரண்டாக உடைந்துகிடக்கிறது.

இது ஒருபுறமிருக்க, இப்போதைய தேர்தல் கூட்டணிக்கு முன்பு சில ஆண்டு காலம் அ.தி.மு.க.வும்- பா.ஜ.க.வும் தனித்தனியாகவே இருந்தன. அந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க.வினர் சகட்டுமேனிக்கு அ.தி.மு.க.வை விமர்சித்தனர்.

தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்த-ல் போட்டியிட்டு ஜெயித்தபின்பு, மிகத் தாமதமாக தினகரனின் ஆதரவாளரான தங்க. தமிழ்ச் செல்வனை நீக்கினர் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும். இதனை பா.ஜ.க. ஆதரவு ஆடிட்டரான குருமூர்த்தி விமர்சித்தபோது சக்தியற்ற (ண்ம்ல்ர்ற்ங்ய்ற்) தலைவர்கள் என விமர்சித்தார். 

இதனால் வெகுண்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் "ஆண்மையற்றவர்கள்தான் அதைப் பற்றியே பேசுவார்கள். ஆண்மையுள்ளவர்கள் அதுகுறித்துப் பேசமாட்டார்கள். குருமூர்த்திக்கு தமிழகத்தில் முகமே கிடையாது' என்று கொந்தளித்தார்.

முன்னாள் முதல்வரும் கட்சித் தலைவியுமான ஜெ.வை, குறித்து அ..மலை, ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என துணிச்சலாக விமர்சித்தார். கட்சியின் பெயரிலேயே இருக்கும் அண்ணாவையும்கூட பிறிதொரு சமயம் விமர்சித்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார், "கர்நாடகாவில் தேர்தலுக்கு இவர் பொறுப்பேற்றதால் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியது. தைரியமிருந்தால் கர்நாடகாவில் நடந்த 40 சதவிகித ஊழல் குறித்து அ..மலை பேசவேண்டும்' என பதிலடி கொடுத்தார்.

ஜெ.வையும் தாண்டி எடப்பாடியையே குறிவைத்து "காண்ட்ராக்டர்களுக்காக கட்சி நடத்திக்கொண்டி ருக்கிறார்' என 2024-ல் விமர்சித்தார் அ..மலை.

இப்படி பா.ஜ.க. தரப்பில் அ.தி.மு.க. மீது வைக்கப்பட்ட விமர்சனங்களைத் திரட்டி தனித் தொகுப்பே வெளியிடலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் அ.தி.மு.க. தரப்பி-ருந்து வலுவான, வீரியமான விமர்சனங்கள் சில தருணங்களில் மட்டும்தான் வெளிப்பட்டன.

ஏனென்றால், ஜெ. மறைவுக்குப் பின் எடப்பாடி ஆட்சி செய்த காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்த கோப்புகளும் அ.தி.மு.க.வின் குடுமியும் பா.ஜ.க.வின் கைப்பிடியில் இருக்கிறது என்பது கட்சியிலுள்ள ஒவ்வொருவருக்குமே தெரியும். விமர்சனம் என்ற பெயரில் அளவுக்கதிகமாகத் துள்ளினால், சி.பி.ஐ.யும் வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் பாய்ந்துவரும் எனத் தெரியும் அ.தி.மு.க. தலைகளுக்கு.

இத்தனை ஏன், தமிழகத்தில் கூட்டணிக்குத் தலைமை அ.தி.மு.க. தான் என்று தொடக்கம் முதலே எடப்பாடி பழனிச்சாமி பேசிவருகிறார். ஆனால், கூட்டணி குறித்து பா.ம.க. (அன்புமணி), தினகரன் என தே.ஜ.க. கூட்டணியிலுள்ள ஒவ்வொருவரும் பியூஷ் கோய-டம் சென்று பேசினார்களே தவிர, ஒருவரும் எடப்பாடியிடம் வந்து பேசவில்லை. இப்போதே இத்தனை குரலற்றுப் போயிருக்கும் எடப்பாடி, தேர்த-ல் ஜெயித்தால் மட்டும் அவரைப் பேச விட்டுவிடுமா பா.ஜ.?

இப்படி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மண்ணை வாரி இறைத்துக்கொண்ட கட்சிகளும் ஆளுமைகளும் தேர்தலுக்காக ஒருவருடன் ஒருவர் தங்கள் சுயநலத்தை முன்வைத்துக் கைகோத்திருக்கும் இந்தக் கூட்டணி எப்படி ஒற்றுமையாகச் செயலாற்ற முடியும்? இவர்களை நம்பி எப்படி மக்கள் வாக்களிக்க முடியும்?

ஆசை வெட்கமறியாது என்பார்கள். அப்படி ஆட்சியின் மீதான ஆசையால் ஒருவருக்கொருவர் இழிவாகப் பேசியதை மறந்து அதிகாரத்துக்காக கைகோத்திருக்கும் இவர் களை, இவர்களது கூத்துக்களை மக்கள் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் புதிதாக அரசியல் களத்துக்கு வந்திருக்கும் த.வெ.க.வையும் அதன் தலைவர் விஜய்யையும் மற்றொரு வகையில் நெருக்குகிறது பா.ஜ.க.கரூர் விவகாரத்தில் 41 உயிர்கள் ப-யான விவகாரத்தில், தானே போய் சி.பி.ஐ. விசாரணை கேட்டு பொறியில் சிக்கியிருப்பது ஒரு பக்கமென்றால், மற்றொரு புறம் "ஜனநாயகன்' படம், தணிக்கை வாரியத்தின் கெடுபிடிகளால் மாதக்கணக்கான வெளியாகாமல் பெட்டிக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறது.

படத்தில் வெளிநாட்டு சக்திகள் மதப்பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக காட்சிகள் இருப்பதாகக் கூறி மறுதணிக்கை செய்வதற்கான குழு அமைத்து, அவர்களின் கருத்துக்குப் பிறகே தணிக்கைச் சான்றிதழ் வழங்கமுடியுமென தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இதனால் பொங்கலுக்கு முன்பே வெளியாகவேண்டிய "ஜனநாயகன்' படம் இன்னும் தள்ளிப் போகும்போல் தெரிகிறது. தயாரிப்பாளர் மாதக்கணக்கில் நீளும் நீதிமன்ற விவகாரங்களைப் பார்த்தபடி, பதற்றத்துடன் நீதிமன்றப் படியேறிக்கொண்டிருக்கிறார்.

மற்றொருபுறம் சமூக ஊடகங்களிலும் விவாதங் களிலும் பட வெளியீட்டுக்கான தடைக்கு தி.மு.க.தான் காரணம் என்பதுபோன்ற பிம்பத்தை கட்டியெழுப்ப முயன்றுவருகின்றனர் பா.ஜ.க.வினர். தணிக்கை வாரியம், மத்திய அமைப்பு. அதில் மாநில அரசுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாதென்பது விவரமில்லாதவர்களுக்குகூடத் தெரியும். தெரிந்தும் பழிபோடும் நோக்கத்தில் செயல்படுபவர்களின் வஞ்சகத்தை த.வெ.க.வினரும் விஜய் அபிமானிகளும் உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆதங்கத்துடன்

நக்கீரன்கோபால்